கோவிட் தொற்றுநோய்க் காலப்பகுதியிலான வாழ்க்கை. 


கோவிட் தொற்றுநோய் பற்றிய தோர் அறிமுகம். 



                             டிசம்பர்  31.2019 அன்று என்னவென்று கண்டறியமுடியாத நிமோனியா வைரஸ் காய்ச்சல் சீனாவில் இருக்கும் வுஹான் மாகாண சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு காரணம் புதிய கொரோனாவைரஸ் தான் என்று உறுதிசெய்யப்பட்டது. இது 2019 புதிய கொரோனா வைரஸ் அல்லது covid-19 என்று அழைக்கப்படுகின்றது. இதுவரை இவ்வாறான வைரஸ் மனித குலத்தில் கண்டறியப்படவில்லை.

                           கொரோனா வைரஸ்கள் என்பது வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பமாகும். இது சாதாரண ஜலதோஷத்திலிருந்து மிகவும் கடுமையான நோய் தொற்றுகளான மூச்சுக்குழல் அழற்சி, நிமோனியா அல்லது கடுமையான சுவாச நோய்க்குறி போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

                           சீனாவில் உள்ள ஹீபெய் (வுஹான் ) பிராந்தியத்தில் முதலில் தோன்றிய 2019 புதிய கொரோனா வைரஸ் சுவாச தொற்றுநோய்களை ஏற்படுத்தியது. ஒன்டாரியோவில் முழுமையாக உறுதிப்படுத்தப்படாத ஆனால் இருக்கும் என நம்பக்கூடிய வகையில் இந்த தொற்று நோய் முதலில் ஜனவரி 25.2020 அன்று கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள். 

                     


                       இதன் அறிகுறிகள் மிதமான காய்ச்சல் மற்றும் சாதாரண சுவாச தொற்றுகள் போன்றவற்றிலிருந்து தீவிரமானவை வரை இருக்கும். இவற்றோடு பின்வருவனவும் இருக்கலாம்.


  • காய்ச்சல்.  
  • இருமல்.
         மூச்சு விடுவதில் சிரமம்.                                                                                                                                             2019 புதிய கொரோனா வைரஸ் மூலம் தீவிரமான சிக்கல்கள் ஏற்படலாம். அவற்றுள் நிமோனியா அல்லது சிறுநீரக செயலிழப்பு மேலும் சில சமயங்களில் இறப்பு கூட நேரிடும் வாய்ப்புகள் உள்ளன.

                    


              நீங்கள் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து திரும்பி வந்திருந்தால் 14 நாட்களுக்கு உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பயணங்களின் போது நீங்கள் 2019 புதிய கொரோனா வைரஸுக்கு ஆளாகியிருக்கலாம் மற்றும் வீட்டிலேயே தங்கி மற்றவர்களுடனான தொடர்பைக் கட்டுப்படுத்துவது மேலும் பரவுவதைத் தடுக்க உதவும். ஆலோசனைக்கு உங்கள் உள்ளுர் பொது சுகாதார பிரிவினை தொடர்பு கொள்ளவும்.

               கொரோனா வைரஸ்கள் முக்கியமாக ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகின்றன.

  (உ+ம்) வீடு, பணியிடம் or சுகாதார மையம். 

கொரோனா வைரஸ் தொற்றுக்கான பாதுகாப்புக் குறிப்புகள். 

                    

                   2019 புதிய கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க எந்த தடுப்பூசியூம் இல்லை.

                   சுவாச நோய்களை ஏற்படுத்தும் கிருமிகளைப் பரவாமல் தடுக்க உதவும் அன்றாட நடவடிக்கைகள் உள்ளன. வைரஸின் வெளிப்பாட்டைக் குறைக்கவும், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் இந்த அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

                   
  • சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது அல்கஹால் சேர்த்த கை சுத்திகரிப்பு மூலம் உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். 
  • உங்கள் கைகளிலேயே தும்மவும் மற்றும் இரும்பவும். 
  • உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
  • நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருக்கவும்.

                       கொரோனா வைரஸ்களுக்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை. மேலும் கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியூம் எதுவும் இல்லை. பொதுவான மனித கொரோனா வைரஸ் நோய்கள் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களாகவே குணமடைவார்கள்.
   
                         


 நாங்களாக செய்து கொள்ள வேண்டியது,
  • அதிகப்படியான திரவங்களை குடிக்கவும். 
  • முடிந்தவரை ஓய்வெடுக்கவும் மற்றும் தூங்கவும்.
  • தொண்டை புண் அல்லது இருமலுக்கு உதவ ஈரப்பதமூட்டி அல்லது வெந்நீர் குளியலை முயற்சிக்கவும்.
  • கூட்டமாக சேர்ந்து கதைப்பதைத் தவிர்த்தல்.
Mask அணிந்து கொள்ளல். 
           

 

கோவிட் தொற்றுநோய் காலப்பகுதியிலான வாழ்க்கை 

              மனித குலத்துக்கு வைரஸ் தாக்குதல்கள் புதியவையல்ல. நூறாண்டுகளுக்கு முன்பு 1918-ல் கொடூரமாக பரவிய ஸ்பானிய ஃபுளு 50 கோடிக்கும் அதிகமானோரை பாதித்து, ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பலியாகக் காரணமாக இருந்தது.

               
                      
                      அறிவியலும் தொழிநுட்பமும் கற்பனைக்கு எட்டாத வகையில் இன்றைக்கு வளர்ந்துள்ளன. மரபணுத் திருத்தம், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, பிக் டேட்டா போன்றவற்றால் மனிதர்கள் தாங்களே உலகை ஆட்டுவிப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மரணத்துக்கே  சவால்விடக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக மனித இனம் மார்தட்டிக்கொண்டிருக்கிறது.
   
                       இந்த பின்னணியில்தான் கொரோனா என்ற கோவிட் 19 தாக்குதல் மனிதகுல அறிவின் வீச்சை மட்டுமல்லாமல் அறிவியல் தொட்ட எல்லைகளையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. வல்லரசு என்று மார்தட்டிக்கொண்ட பல நாடுகள் கொரோனாவை எதிர்க்கத் திராணியற்று மண்டியிட்டு நிற்கின்றன.

                         மேலும் கொரோனா தொற்று பல்வேறு துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் சட்டம் போன்ற இவ்வாறான துறைகளை குறிப்பிடலாம்.

                        கல்வி 

              

                      பொதுவாகவே விடுமுறைகளுக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் இயல்பு உண்டு. குறிப்பாக மாணவர்களுக்கு விடுமுறை என்ற உடன் கற்றல் தரும் இறுக்கம் தளர்ந்து, உவகையும் உற்சாகமும் மாணவர்களிடம் குடியேறிவிடும். ஆனால், கொரோனா பரவும் அச்சத்தால் விடப்பட்டிருக்கும் இந்த அசாதாரண விடுமுறையை அப்படிக் கருத முடியாது.

                     கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கல்வி வளாகங்கள் மட்டுமல்லாமல், திரையரங்குகளும் பெரும் வணிக வளாகங்களும் (மால்கள்) மூடப்பட்டுவிட்டன. குழந்தைகள் கூடி விளையாடும் பூங்காக்களில்கூட தற்போது பூட்டுகள் தொங்குகின்றன.

                      அச்சமும் அவநம்பிக்கையும் உலகெங்கும் பரவியிருப்பதால் வெளியே செல்ல முடியாமல் மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அலுப்பூட்டும் தெரிந்த முகங்கள், சலிப்பூட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்/ வீடியோ கேம் என வீடே சிறையாகிவிட்டதால், கற்றலைவிடக் கூடுதல் இறுக்கத்தை இந்த விடுமுறை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த அலுப்பையும் சலிப்பையும் வெல்வதுடன், அறிவையும் திறனையும் மேம்படுத்தி, விடுமுறையைப் பயனுள்ளதாக இணையவழிக் கல்வி மாற்ற வேண்டும்.

                      திறன்மிக்க ஆசிரியர்களின் விளக்க உரைகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி வீடியோக்கள் அதற்கான இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். மேலும், அந்தத் தளங்களில் கல்வி மட்டுமில்லாமல் தொழிநுட்பம், பொது அறிவு, பொழுதுபோக்கு ஆகியவை குறித்த விளக்க வீடியோக்களும் இருக்கும். 
(உ+ம்) - ஒளிப்படம் எடுப்பது எப்படி?
             - கணினியை ஒருங்கிணைப்பது                           எப்படி ?
             - சில கைப்பேசி ஆப்களைப்                                   பயன்படுத்துவது எப்படி?
  
              
                
                       ஒரு தேர்ந்த ஆசிரியரால் மட்டுமே எந்த ஒரு கஷ்டமான பாடத்தையும் சுவாரஸ்யமிக்கதாக இலகுவானதாக மாற்ற முடியும். பள்ளியையோ கல்லூரியையோ தேர்ந்தெடுக்க முடிந்த மாணவர்களாலும் பெற்றோராலும் அந்தப் பள்ளியின் ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் இணையவழிக் கல்வியில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் என்பதுடன், எந்த ஆசிரியரிடம் படிக்கலாம் என்பதையும் நீங்கள் தீர்மானிக்க முடியும். முக்கியமாக ஆசிரியரை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

                        எல்லா இணையத்தளங்களிலும் இத்தகைய விளக்க வீடியோக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஆசிரியர்களின் திறன், அவருடைய வீடியோக்களுக்கு இருக்கும் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் சில இணையதளங்களில் வீடியோக்களுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து வீடியோக்களின் ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பீடுகள், அவற்றின் அருகில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

                      இதில் ஆசிரியரின் முகத்தை மட்டும் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இணையவழி என்பதால் அந்த பாடத்துக்குத் தொடர்புடைய சில  வீடியோக்களும் உங்களுக்கு விளக்கமளிக்கப் பயன்படுத்தப்படும். இது உங்கள் கற்றலை எளிதாக்கி அலுப்பை நீக்கிப்படிப்பைச் சுவாரஸ்யமானதாக மாற்றும்.

                      
                           
                       இணையவழிக் கல்விக்கு பல இணையத்தளங்கள் உள்ளன. மேலும், உலகின் பிரசித்தி பெற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இணையவழிக் கல்வியில், முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அதில் பெரும்பான்மையான பாடங்களை இலவசமாகவே படிக்க முடியும். கொஞ்சம் பொறுமை, அக்கறை, ஈடுபாடு போன்றவை தேவை.

                          இன்று கூரை ஒரு பொருட்டல்ல, மூடிய கதவுகள் ஒரு பொருட்டல்ல, தூரமும் ஒரு பொருட்டல்ல, வேண்டிய அனைத்தும் நம் வீடு தேடி வரும் வசதி இருக்கிறது. நண்பர்களை, உறவுகளை நேரில் பார்க்காமலேயே அவர்களுடன் உறவாட முடிகிறது. மூடிய அறைக்குள் இருந்த படியே புது நட்புக்களை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. 

                          தொழில்நுட்ப வளர்ச்சியும் இணைய வசதியின் கட்டணக் குறைவும் இணைந்து நிகழ்த்திய மாயாஜலம் இது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் லைட், ஸ்மார்ட் பாதுகாப்பு சாதனம், ஸ்மார்ட் வீடு என நீளும் பட்டியலில் இணைந்து  நம் கல்வியும் 'ஸ்மார்ட் ' டாகி விட்டது. இந்த விடுமுறைக்கு அதைத் தேர்வுசெய்தால், அறிவைப் பெருக்குவதுடன், கொரோனாவிலிருந்தும் அது நம்மை பாதுகாக்கும்.

            

                பொருளாதாரம்

           
                

                      உலகின் முன்னணி நாடுகள் பலவும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளது. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் இதுவரை சந்தித்திராத பல புதிய சவால்களினை சந்தித்த வண்ணமுள்ளது. குறிப்பாக உலக முன்னணி நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், கனடா, அவுஸ்திரலியா, இத்தாலி போன்ற நாடுகளின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதனை நோக்குமிடத்து  இலங்கை நாட்டுக்கு உதவி வழங்கும் பல நாடுகளும்  பாரிய நிதி பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன.

                      கொரோனா வைரஸினால் வீட்டினுள் முடங்கியிருந்த இலங்கை மக்கள் உண்மையிலேயே எப்போது முழுமையாக தங்களால் இயங்க முடியுமென்று மிகுந்த ஆர்வத்துடனும் ஒரு புது உத்வேகத்துடனும் காத்து நின்றனர். நாம் ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட துறைகளில் ஈடுபட்டு வந்தாலும் அவரவர் கடமைகளினை ஒழுங்காகவும், நேர்த்தியாகவும் செய்வோமாயின் இலங்கை நாடு நிச்சயமாக வெற்றி பாதையினை நோக்கி வீறுநடை போட முடியும். அந்த வகையில் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸினால் உருவாக்கப்பட்ட  இந்த அசாதாரண சூழ்நிலையினை சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் எவ்வாறு முகம் கொடுத்து அதனை வெற்றி கொள்வார்கள் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். 

- வரவு செலவு திட்டம்

                 பொதுவாகவே ஒவ்வொரு நிறுவனமும் வருடாந்த வரவு-செலவு திட்டத்தினை முன்கூட்டியே தயாரிப்பது வழக்கமாகும். அதிலும் நீண்ட கால, நடுத்தரகால மற்றும் குறுகிய கால வரவு செலவு திட்டமிடல் முறைகளினை நடைமுறைப்படுத்துவதனை காணக்கூடியதாகவுள்ளது. இது ஒரு சிறந்த திட்டமிடல் முறையாகும். ஒரு சில நிறுவனங்கள் இந்த முறையினை கடைபிடிப்பதில்லை. அவ்வாறான நிறுவனங்கள் இனிவரும் காலங்களில் இந்த திட்டமிடல் முறையினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக சிறந்த முறையில் நிறுவன இலக்கினை அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

                    ஆனால் நிச்சயமாக இந்த கொரோனா வைரஸினால் உருவாக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் இவ்வாறு முன்கூட்டியே தயாரித்த இலக்கினைவிட பாரிய இடைவெளியினை காணக் கூடியதாக இருக்கும். தகுந்த மாற்றுத் திட்டங்களினை மிகவும் சாதுர்யமாக தயாரித்து உரியமுறையில் அமுல்படுத்துவதன் வாயிலாக இந்த இடைவெளியினை தகுந்த முறையில் கையாண்டு நிரப்பக்கூடியதாக இருக்கும். தேவையேற்படின் சிறந்த வெளிக்கள முகாமைத்துவ ஆலோசனையினை பெற்று பாரிய நட்டம் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளவும் முடியும். ஏனெனில் இனிவரும் இரண்டு வருடங்கள் மிகவும் கடினமான ஒரு காலமாகவே அமையப் போகின்றது.

- நம்பிக்கைத் தன்மையினை கட்டியெழுப்புதல்.

                 இனிவரும் காலம் இந்த உலகம் முழுமையாக நம்பிக்கை என்கிற அத்திவாரத்திலேயே இயங்க போகிறது. அந்த வகையில் இலங்கையரான நாமும் இந்த புதிய மாற்றத்திற்கு நம்மை தயார்படுத்த வேண்டியவர்களாக நிற்கின்றோம். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களினை நோக்குமிடத்து இது மிகவும் முக்கியமான மாற்றமாக கருதப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக நடைமுறையில் இருந்து வரும் Lock down stay at home காரணமாக அவர்களின் தொழிலாளிகள் வேலைத்தளத்திற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சூழ்நிலை ஓரளவு வழமைக்கு திரும்பி வருகின்றதென்றாலும் மக்கள் அதிகம் ஒன்று சேரும் பிரதான இடங்களில் இன்னும் கட்டுப்பாடுகள் இருந்த வண்ணமே உள்ளது. போதிய போக்குவரத்து வசதியின்மை காரணமாகவும் மற்றும் அச்சம் காரணமாகவும் தொழிலாளிகள் நேரடியாக வேலைத் தளத்திற்கு சமூகமளித்து தமது கடமைகளினை பூரணமாக செய்ய முடியாத ஒரு கஷ்டமான நிலைமை காணப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையினை அறிமுகப்படுத்தி வருவதினை நாம் பார்க்கின்றோம்.

                      இந்த முறையானது வெளிநாடுகளில் பல காலம் இருந்து வருவதினை நாம் அறிவோம். இருந்தாலும் இந்த முறையானது எமது இலங்கை நாட்டிற்கு ஒரு புதிய மாற்றமாக காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களினை பொறுத்தவரையிலும் இது ஒரு புதிய மாற்றமாகவே கருதப்படுகிறது. இவ்வாறான தருணத்தில்தான் குறிப்பிட்ட நம்பிக்கை என்கிற புரிந்துணர்வு மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஏனெனில் பூரண வியாபார செயல் முறையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு அலகும் சிறந்த முறையினில் முழு நம்பிக்கையில் செயற்பட்டாலே அந்தந்த நிறுவனங்கள் சிறந்த தரம் வாய்ந்த பொருட்களினையோ அல்லது சேவையினையோ நுகர்வோரிற்கு தொடர் தேர்ச்சியாக வழங்க முடியும். இந்த நம்பிக்கையானது அந்தந்த அலகிற்கு மட்டுமல்லாது மற்றைய அலகிற்கும் மிகவும் பொருந்தும். 

                      ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வியாபார செயல்முறையில் பெற்றுக்கொண்ட பொருட்கள் அல்லது சேவைகள் உறுதி செய்யப்பட்ட தரத்துடன் இருப்பது மாத்திரமின்றி அடுத்த வியாபார செயல் முறையிந்து கையளிக்கும் போதும் உறுதி செய்யப்பட்ட தரத்துடன் இருப்பதனை பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு செயற்பாட்டில் அவர்கள் உள்ளனர். இந்த முறையாலேயே தரமான பொருட்களினையோ அல்லது சேவையினையோ நுகர்வோரிற்கு வழங்கி நன்மதிப்பினை பெற்று நிறுவனத்தின் இலக்கினை அடையக் கூடியதாக இருக்கும். இந்த செயற்பாடுகளிற்கு நிறுவனத்திற்குள் நம்பகத் தன்மையினை கட்டியெழுப்புதல் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயற்பாடாக விளங்குகின்றது.

            


- சட்டத்தினை பின்பற்றுதல் 

                கொரோனா வைரஸினால் உருவாக்கப்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டங்களினை ஒவ்வொரு தனிநபரும் மற்றும் நிறுவனமும் உடனுக்குடன் தெரிந்து அதனை முழுமையாக பின்பற்றுதல் தலையாய கடமையாகும். உதாரணமாக முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், ஊரடங்குச் சட்டம் போன்றவற்றைக் கூறலாம். அத்துடன் ஏனைய அமுலில் உள்ள சட்டங்களினையும் முன்னைய காலம் போன்று தவறாது பின்பற்றுதல் கடமையாகும். 

              உதாரணமாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவு (ETF), வருமான வரி மற்றும் மறைமுக வரி (VAT) போன்றவற்றினை செலுத்தும் படிவங்களினை உரிய காலத்தில் சமர்ப்பித்தல், மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்களினை குறித்த திகதிக்குள் செலுத்துதல் போன்ற பல காணப்படுகின்றது. ஏனெனில் இவ்வாறான சட்டங்களினை ஒழுங்காக பின்பற்றாத விடத்து தேவையற்ற சட்ட ஒழுங்காற்று பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டி வரும். 

              


- சிறந்த நிதித் திட்டமிடல் 

                  உலகில் முன்னணி நாடுகள் பலவும் பாரிய பிரச்சினைகளுக்கு கொடுத்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் இதுவரை சந்தித்திராக பல புதிய சவால்களினை சந்தித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உலக முன்னணி நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி,இங்கிலாந்து, ஜப்பான், கனடா, அவுஸ்திரலியா, இத்தாலி போன்ற நாடுகளின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனை நோக்குமிடத்து இலங்கை நாட்டிற்கு நிதி உதவி வழங்கும் பல நாடுகளும் பாரிய நிதிப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது. எமது நாடு உலக வங்கியிடமும், ஏனைய வளர்ந்த நாடுகளிடமும் தேவையான நிதி உதவியினை தேவையான தருணத்தில் முன்பு போன்று இலகுவாகப் பெறுவதில் பாரிய சிக்கல்களினை நிச்சயமாக எதிர்கொள்ள நேரிடும். 

                    இதன் வாயிலாக இலங்கையின் உள்நாட்டு வர்த்தகத் துறையினர் தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதில் பாரிய நெருக்கடிகளினை சந்தித்து வருவதுடன், இனிவரும் காலங்களில் இதுமேலும் பூதாகாரமான ஒரு பிரச்சினையாக உருவெடுக்க உள்ளது. அதிலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாரிய தாக்கம் ஏற்படுவது திண்ணமே. 

                 சுகாதாரம் 

                   பொது சுகாதார அவசரநிலை சுகாதார வசதிகள், மருத்துவ போக்குவரத்து, நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எல்லா இடங்களிலும் இலக்குகளாக மாறக்கூடும் என்பதை நிருபித்துள்ளது. இந்த ஆபத்தான போக்கு வன்முறைச் செயல்களில் இருந்து சுகாதாரத்தைப் பாதுகாக்க மேம்பட்ட நடவடிக்கைகளின் தேவையை வலுப்படுத்துகிறது. Covid-19 தொற்றுநோயை விட, முன்னணியில் உள்ள சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களின் உடல்நலம் மற்றும் உயிர்களைப் பாதுகாப்பது ஒரு சிறந்த உலகளாவிய பதிலை செயல்படுத்துவதில் முக்கியமானது.

               

                     

                       இந்த பக்கம் covid-19 தொடர்பான தாக்குதல்களின் சாராம்சம், பதிலில் அவற்றின் தாக்கம், அவற்றை  ஒட்டுவதில் களங்கத்தின் பங்கு மற்றும் இறுதியாக, அவற்றின் தாக்கத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் சுருக்கமான கண்ணோட்டம் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

                       சுகாதார சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்வது ஒரு வெற்றிகரமான சுகாதார பதிலின் மூலக்கல்லாகும். வன்முறை, தடைகள் அல்லது அச்சுறுத்தல் போன்ற எந்தவொரு வாய்மொழி அல்லது உடல்ரீதியான செயலும் அத்தகைய சேவைகளின் கிடைக்கும் தன்மை, அணுகல் மற்றும் விநியோகத்தில் தலையிடுகிறது என்பது உலக சுகாதார அமைப்பின் (WHO) சுகாதாரப் பாதுகாப்பு மீதான தாக்குதல் என வரையறுக்கப்படுகிறது.

                     Covid-19 தொற்றுநோய் சில சுகாதார அமைப்புக்களை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது மற்றும் தாக்கம் அவற்றின் திறனைத் தாண்டி நீண்டுள்ளது. எனவே இந்த பொது சுகாதார அவசரநிலைக்கு பதிலளிப்பதும் அதன் தாக்கத்தை வெற்றிகரமாக குறைப்பதும் ஒவ்வொரு சுகாதாரத்துறையினதும் கடமையாகும். விரைவாக மாறிவரும் இந்த சூழலில் சுகாதாரத்தை பாதுகாப்பதில் தோல்வி என்பது சுகாதார அமைப்புக்களில் காணப்படும் இடைவெளிகளை வெளிப்படுத்துகிறது. 

                      பலவீனம் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில், covid-19 தொற்றுநோயின் போது வன்முறை செயல்களால் ஏற்கனவே நூற்றுக்கணக்கான மருத்துவ சேவைகளை இழந்துவிட்டன.  லிபியா குண்டுவெடிப்பின் போது 400 படுக்கைகளின் அழிவு சுகாதார அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களின் திறனை, ஒரு முழுமையான தொற்றுநோய்க்கு தயார்படுத்தும் திறனை மேலும் குறைத்தது.

                     சுகாதார பாதுகாப்பு மீதான தாக்குதல்கள் கவனிக்கப்பட்ட பிற நாடுகளில், covid-19 தொற்றுநோய் சில சமயங்களில் வன்முறை, பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை புகாரளித்த சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்களுக்கு விரோதமான சூழலை உருவாக்கியுள்ளது. பல நாடுகளில் தொற்றுநோய்க்கு உள்ளானவர்கள் என களங்கப்படுத்தப்பட்டு, சிலர் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும் சிலர் வேலைக்குச் செல்லும்போது போக்குவரத்து மறுக்கப்பட்டது, மேலும் சில குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் covid-19 மாதிரிகள், கடமையிலுள்ள covid-19 ஓட்டுநர்கள் மற்றும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் மருத்துவ வாகனங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் உலகளவில் குவிந்து வருகின்றன. 

                      எவ்வாறாயினும், சுகாதார பாதுகாப்பு மீதான தாக்குதல்கள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான சுகாதார அமைப்புக்களின் திறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் உளவியல் சமூக ஆரோக்கியத்திற்கும், முன்னணி சுகாதார மற்றும் குடும்பங்களின் முக்கியமான சுகாதார வழங்குநர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த பொது சுகாதார அவசரகாலத்தின் போது வன்முறைச் செயல்களால் அவை தொடர்ந்தும் குறிவைக்கப்படுவதால் சுகாதார அமைப்புக்கள் சுகாதார பணியாளர்களின் பற்றாக்குறைக்கு தயாராக இருக்க வேண்டும் அல்லது பாதுகாப்பற்ற சூழல்கள் அல்லது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு தடங்கல்களாக இருக்கும். 

                   Covid-19 தொற்றுநோயுடன் தொடர்புடைய வன்முறைச் செயல்கள் வளர்ந்து வரும் சமூகத்தளங்கள் மற்றும் வைரஸுடன் தொடர்பு கொண்டதாக கருதப்படும் எவருக்கும் எதிரான பாரபட்சமான நடத்தைகளின் பின்னணியில் நடைபெறுகின்றன. சுகாதார வளங்கள், நோயாளிகள், சுகாதார பாதுகாப்பு வழங்குநர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குறிப்பாக ஒரு சமூகத்தில் தொற்றுநோயாளர்களாக மாறிவிட்டார்கள் என்ற தவறான நம்பிக்கையின் காரணமாக தாக்குதல்களை மேற்கொள்ளவது ஆபத்தானதாகும். 

                  சுகாதார பாதுகாப்பு மீதான இந்த தாக்குதல்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பயம், களங்கம் மற்றும் இறுதியில் வன்முறை ஆகியவற்றை குறைப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசுகின்றன. Covid-19 நோயை எதிர்த்து எவ்வாறு போராடுவது, சுகாதாரத்தை பாதுகாப்பதற்கும், பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க மக்களை ஆதரிப்பதும் முக்கியமானதாகும். 

                 

                    

                     தொற்றுநோய்களின் போது சர்வதேச சமூகம், அரசாங்கங்கள் மற்றும் சிவில் சமூகம் சுகாதார பாதுகாப்பு மற்றும் அவற்றின் வேர்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதன் மூலம் சுகாதார அமைப்புகளைப் பாதுகாக்க முதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

                    சுகாதார வசதிகள் மற்றும் நீர் மற்றும் சுகாதார அமைப்புக்கள் போன்ற முக்கிய உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்நிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சில தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் சுகாதாரப் பாதுகாப்பைப் பாதுகாக்க புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தின.

(உ+ம்) - இந்தியாவில் குற்றவாளிகள் 7                             ஆண்டுகள் வரை சிறை தண்டனை                     விதிக்கப்படுவார்கள்.

             - மெக்ஸிகோவில், சில நகரங்கள்                           சுகாதாரப் பணியாளர்களுக்காக                         பிரத்யேக போக்குவரத்து                                         சேவைகளை                                                                  நடைமுறைப்படுத்தியுள்ளன.

                 

                     WHO அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை covid-19 ஐச் சுற்றியுள்ள களங்கத்தை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளன. வழக்கமான சமூக ஊடக பிரச்சாரங்களுக்கு மேலதிகமாக ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் தவறான தகவல்களின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய இராச்சிய அரசாங்கமும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து 'பரவலை நிறுத்து' என்ற கூட்டு பிரச்சாரத்தை தொடங்கின. சுகாதார வசதிகளுக்காக ஒரு covid-19 இடர் தொடர்பு தொகுப்பு அத்துடன் நாடுகளுக்கான அர்பணிப்பு இடர் தொடர்பு மற்றும் சமூக ஈடுபாடு (RCCE) வழிகாட்டுதல் மற்றும் சமூக களங்கத்தைத் தடுக்க மற்றும் உள்ளூர் அமைப்புக்களுக்கான வழிகாட்டுதலையும் WHO வழங்கியுள்ளது. 

               


 

                        சட்டம் 

         
         
                      Covid-19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக நிறுத்தப்படுவது சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. பேரழிவு நிவாரணம், சுகாதார சட்டம், காப்பீடு, தொழிலாளர் சட்டம் மற்றும் தொற்றுநோயால் உருவாகும் ஏராளமான சட்ட சிக்கல்களைக் கையாள்வதற்கு முன்னோடியில்லாத வகையில் சட்ட சேவைகள் தேவைப்படும் நேரத்தில் சட்ட தொழில் மற்றும் நீதி அமைப்பு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நீதி, வீட்டு வன்முறை மற்றும் சிவில் உரிமைகள் இந்த பிரச்சினைகளுக்கு வக்கீல்கள் தேவைப்படுவது, ஆனால் தொற்றுநோய்களின் போது பார் தேவை நிர்வகிப்பதன் கடுமையான உடல்நல பாதிப்புக்கள் காரணமாக புதிய வழக்கறிஞர்களுக்கு உரிமை வழங்குவதற்கான வாய்ப்பு சவாலானது. மாநிலஉச்ச நீதிமன்றங்கள் உரிமையிற்கான மாற்று வழிகளை தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. 
         
                     அத்தகைய ஒரு மாற்றுடிப்ளோமா சலுகை, தற்போது விஸ்கான்சினில் மட்டுமே பயன்படுத்தப்படும் உரிமையிற்கான பாதை. விஸ்கான்சினின் சலுகை, அதன் இரண்டு மாநிலப்பள்ளிகளின் பட்டதாரிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படுள்ளது. இது கீழ் நீதிமன்றங்களால் ஒருபோதும் முழுமையாக தீர்க்கப்படாத அரசியலமைப்பு சவால்களை தூண்டியுள்ளது. தொற்றுநோயை நிவர்த்தி செய்ய அவசரடிப்ளோமா சலுகைகளை வழங்கப்பட்டுள்ளது. 

                   தொற்றுநோய்க்கு அடுத்த என்ன வரப்போகிறது என்று தெரியாமல் இருப்பது சிக்கலானது மற்றும் பல வக்கீல்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்ன செய்வது, எப்படி சிறந்த முறையில் உதவுவது என்று யோசித்து வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சட்டரீதியான தேவைகள் உள்ளன.

                   
                     
                    இவ்வாறாக கொரோனாதொற்றுக் காலத்தையும் அதில இலங்கையின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், சட்டம் போன்ற துறைகள் வாழ்க்கை கோலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
                        

Comments

Popular posts from this blog