![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4y51C_uYsc7BZXMEyXKN-Bywwv6MgiEIcBgb54gkcPAq3xJA4KEf6p2Xsssp8i-xg9yi6ZL5Z_pMutoQUKMXY0ctCzuy-MvAQpxhyphenhyphenHNgGo3VaYoaiaGn8wXggPsUuQDmnaCFeVn8UGcY/s0/9_4_Blessed-MotherTeresa1.jpg)
03. அன்னை தெரேசா ஆதரவற்றவர்களின் அன்புத் தெய்வம், கருணையின் வடிவம், கர்த்தரின் அருட்கொடை என்றெல்லாம் போற்றப்படும் பெருமை மிக்கவர் அன்னை தெரேசா. ஐரோப்பா கண்டத்தில் அல்பேனியாவில் 6விவசாயக் குடும்பம் ஒன்றில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் பிறந்தார் அன்னை தெரேசா. அவ்வூர் அரசினர் பாடசாலையில் தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். குழந்தைகள், பெரியார்கள், நோயாளிகள் போன்ற பலரோடும் இளமையிலேயே அன்பாகவும், மரியாதையாகவும் பழகி வந்தார். கிறிஸ்தவ மதத்தில் ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்டவர் தெரேசா. இயேசு பெருமானைப் போன்று மக்களுக்குத் தாமும் தொண்டாற்ற வேண்டும் என்று விரும்பினார். மக்கள் சேவைக்காகவே தம்மை அர்ப்பணித்தார். 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து அல்லல்படும் மக்...