Posts

Image
 கோவிட் தொற்றுநோய்க் காலப்பகுதியிலான வாழ்க்கை.  கோவிட் தொற்றுநோய் பற்றிய தோர் அறிமுகம்.                               டிசம்பர்  31.2019 அன்று என்னவென்று கண்டறியமுடியாத நிமோனியா வைரஸ் காய்ச்சல் சீனாவில் இருக்கும் வுஹான் மாகாண சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதற்கு காரணம் புதிய கொரோனாவைரஸ் தான் என்று உறுதிசெய்யப்பட்டது. இது 2019 புதிய கொரோனா வைரஸ் அல்லது covid-19 என்று அழைக்கப்படுகின்றது. இதுவரை இவ்வாறான வைரஸ் மனித குலத்தில் கண்டறியப்படவில்லை.                            கொரோனா வைரஸ்கள் என்பது வைரஸ்களின் ஒரு பெரிய குடும்பமாகும். இது சாதாரண ஜலதோஷத்திலிருந்து மிகவும் கடுமையான நோய் தொற்றுகளான மூச்சுக்குழல் அழற்சி, நிமோனியா அல்லது கடுமையான சுவாச நோய்க்குறி போன்ற நோய்களை ஏற்படுத்தும்.                            சீனாவில் உள்ள ஹீபெய் (வுஹான் ) பிராந்தியத்தில...
Image
 03. அன்னை தெரேசா                                                ஆதரவற்றவர்களின் அன்புத் தெய்வம், கருணையின் வடிவம், கர்த்தரின் அருட்கொடை என்றெல்லாம் போற்றப்படும் பெருமை மிக்கவர் அன்னை தெரேசா. ஐரோப்பா கண்டத்தில் அல்பேனியாவில் 6விவசாயக் குடும்பம் ஒன்றில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் பிறந்தார் அன்னை தெரேசா. அவ்வூர் அரசினர் பாடசாலையில் தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். குழந்தைகள், பெரியார்கள், நோயாளிகள் போன்ற பலரோடும் இளமையிலேயே அன்பாகவும், மரியாதையாகவும் பழகி வந்தார்.                        கிறிஸ்தவ மதத்தில் ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்டவர் தெரேசா. இயேசு பெருமானைப் போன்று மக்களுக்குத் தாமும் தொண்டாற்ற வேண்டும் என்று விரும்பினார். மக்கள் சேவைக்காகவே தம்மை அர்ப்பணித்தார்.                       1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து அல்லல்படும் மக்...
Image
  02.சுவாமி விபுலாநந்தர்                                              தமது வாழ்நாள் முழுவதும் துறவறத்தில் நின்று தமிழ் வளர தவம் புரிந்த பெருந்தகை ஆவார். அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவர் வாழ்வு ஒப்பற்றது.               மீன்பாடும் தேன்நாடு என்று போற்றப்படுவது மட்டக்களப்பு. அங்கே காரேறு மூதூரில் சாமித்தம்பிக்கும் கண்ணம்மைக்கும் அருந்தவ புதல்வராக 1892 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இருபத்தொன்பதாம் திகதி இவர் பிறந்தார். தாய், தந்தையர் இவருக்கு மயில்வாகனம் எனப் பெயர் சூட்டினர்.              மயில்வாகனம் இளமையில் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளையும் கற்றார். ஆசிரியர் பயிற்சி பெற்றார். விஞ்ஞானக் கல்வியில் நாட்டம் கொண்டார். பெளதிக சாஸ்திரத்தில் பி.எஸ்.சி பட்டமும் பெற்றார். தமிழியற் புலமை வாய்ந்த இவர் மதுரை தமிழ் சங்கத்தின் பண்டிதர் பட்டத்தையு...
Image
  01.பாவேந்தர் பாரதிதாசன்                                          தமிழ் மொழியில் காலத்தால் அழியாத கவிதை மழை பொழிந்த கவிஞர் பலர் உள்ளனர். அவர்களுள் புதுவை தந்த புரட்சிக்குயில் பாவேந்தர் பாரதிதாசனும் ஒருவர்." தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்" என்று முழக்கமிட்ட புரட்சிக் கவிஞர் அவர்.                 வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய பாரதியின் எண்ணங்களை எம் இதயங்களில் ஏற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன். கனகசபை சுப்புரத்தினம் என்பதே அவர் இயற்பெயர். பாரதி மீது கொண்ட பாசத்தினால் தமது பெயரையே பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். பாவேந்தரின் கவிதைப் பயணம் நாடியது, உயரியது, அவருடைய தமிழ்ப்பணிக்கு ஈடில்லை. பாவேந்தர் படைப்புக்களின் தொடர்கள், உவமைகள், சந்தப்பாங்கு, அவற்றின் வீறுநடை தமிழருக்கும், தமிழறிந்தோருக்கும் நல்விருந்து.             ...